சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை பகுதியில் கோகுலக்கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெல்டிங் ஒர்க் ஷாப்பில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கமலக்கண்ணன் 14 வயது சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதில் சிறுமி 6 மாத கர்ப்பமனார். அதன்பின் அந்த சிறுமியை கோகுலக்கண்ணன் திருமணம் செய்ய மறுத்துவிட்டார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் உடுமலை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கோகுலக்கண்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.