Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை…. வாலிபருக்கு 37 ஆண்டு சிறை…. தீர்ப்பளித்த நீதிபதி….!!

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு  37 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை வேடப்படி பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். கடந்த 2016-ஆம் ஆண்டு கார்த்திக் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன்பின் அந்த சிறுமியை கார்த்திக் திருமணம் செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த உடுமலை மகளிர் காவல் துறையினர் போக்சோ மற்றும் குழந்தை திருமணம் செய்த பிரிவின் கீழ் கார்த்திக் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த கார்த்திக்கின் தந்தை மாரிமுத்து, தாய் வீரம்மாள் உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கில் திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுகந்தி தீர்ப்பு கூறினார். அந்த தீர்ப்பில் போக்சோ மற்றும் குழந்தை திருமணம் செய்த குற்றத்திற்காக கார்த்திக்குக்கு 2 ஆயுள் தண்டனை உள்பட மொத்தம் 37 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் குற்றத்துக்கு உடந்தையாக இருந்த வீரம்மாள் மாறும் மார்முத்து ஆகியோருக்கு தலா 2 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் அரசு வக்கீல் ஜமீலா பானு ஆஜராகி வாதாடினார். மேலும் போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் சிறப்பாக செயல்பட்டு வந்த மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வியை பாராட்டினார்.

Categories

Tech |