Categories
உலக செய்திகள்

என்ன நடிப்புடா சாமி…. வலைதள பேச்சு தப்பாபோச்சு…. அதிரடி நடவடிக்கையில் போலீசார்…!!

சிறுமியை 17 வயது சிறுவன் போல நடித்து பேசி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவை சேர்ந்த 23 வயதான இளைஞர் கிறிஸ்டியன் மைக்கேல் ஆவார். இவர் சமூக ஊடகம் ஒன்றில் 14 வயது சிறுமியுடன் 17 வயது சிறுவன் போல நடித்து பேசியுள்ளார். இதனையடுத்து இருவரும் நெருங்கிய நண்பர்களாக பழகி நட்பு பாராட்டியுள்ளனர். இதனை தொடர்ந்து சிறுமியை தனது வீட்டிற்கு வரும்படி அழைத்துள்ளார். அதனால் மைக்கேலின் வீட்டிற்கு சிறுமி சென்றுள்ளார். இதனை அடுத்து மைக்கேல் 17 வயது சிறுவன் போல நடித்து தன்னை ஏமாற்றியது தெரிந்ததும் சிறுமி அதிர்ச்ச்யில் உறைந்துள்ளர்.

இந்த நிலையில் சிறுமி மைக்கேலின் வீட்டிலிருந்து தப்பிக்க முயன்றுள்ளார். ஆனால் அதற்குள் மைக்கேல் பலவந்தபடுத்தி அவரை பாலியல் வன்முறைக்கு ஆளாகியுள்ளார். இதனை அறிந்த போலீசார் மைக்கேலை அவரின் வீட்டிலே கைது செய்துள்ளனர். மேலும் இந்த விசாரணை தொடர்பாக போலீசார் தரப்பில் கூறியதாவது “இவனால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால் எங்களை அணுகலாம் அல்லது தொடர்பு கொண்டு பேசலாம்” என்று கூறியுள்ளனர்.

Categories

Tech |