சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முள்ளக்காடு பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்துரு என்ற மகன் உள்ளார். இவர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சந்துரு கடந்த 24-ம் தேதி அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியை கடத்தி சென்று தூத்துக்குடி விநாயகர் கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளார்.
இது குறித்து அறிந்த சிறுமியின் தாயார் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சந்துருவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.