சிறுமியை கடத்திய கட்டிட தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அழகிய மண்டபம் பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தட்டார்மடம் பகுதியில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். அப்போது சேகர் அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமியை கடந்த 26-ஆம் தேதி திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி அழைத்து சென்றுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் தட்டார்மடம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் சேகர் சிறுமியை கடத்திச்சென்று கேரள மாநிலத்தில் பாலக்காடு பகுதியில் பதுங்கி இருப்பதாக தெரியவந்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சேகரை கைது செய்ததோடு சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.