கூலித்தொழிலாளி 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
அரியலூர் மாவட்டம் அமிர்தராயங்கோட்டை பகுதியில் லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான விஜய் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் 15 வயதுடைய சிறுமியை விஜய் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து அந்த சிறுமிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பாக வயிற்றில் வலி ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதனை அடுத்து சிறுமியை பரிசோதித்து பார்த்ததில் அவர் ஆறுமாதம் கர்ப்பமாக இருப்பது மருத்துவர்களுக்கு தெரியவந்துள்ளது.
இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக ஜெயகொண்டம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின் படி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் விஜய் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்பின் காவல்துறையினர் விஜய்யை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கூறும் போது பெண் பிள்ளைகளுக்கு நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் பற்றி எடுத்து கூறி வளர்க்க வேண்டும் என பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.