Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சிறுமியை மிரட்டிய வாலிபர்… பெற்றோர் பார்த்த புகைப்படம்… கைது செய்த காவல்துறையினர்…!!

சிறுமியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள பரணம் பகுதியில் கூலித் தொழிலாளியான விஜய் என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் விஜய்க்கு 16 வயதுடைய சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து விஜய் அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக  கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன்பின் விஜய் அந்த சிறுமியை செல் போன் மூலம் தொடர்பு கொண்டு என்னுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை  உனது பெற்றோரிடம் காண்பித்து விடுவேன் என்று அடிக்கடி மிரட்டி தொந்தரவு செய்துள்ளார்.

இதனையடுத்து விஜய்  அந்த சிறுமியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அவரது பெற்றோருக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர்கள் சிறுமியிடம் விசாரித்துள்ளனர். அப்போது அந்த சிறுமி நடந்த அனைத்தையும் கூறி விட்டார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனது மகளுக்கு விஜய் என்பவர் அடிக்கடி தொந்தரவு செய்கிறார் என்று புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் படி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்த காவல்துறையினர் விஜய்யை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |