Categories
கிரிக்கெட் விளையாட்டு

சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை ….! பாக். கிரிக்கெட் வீரர் மீது வழக்குப்பதிவு….!

14 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் யாசிர் ஷா மீது பாலியல் புகாரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் .  

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர்  யாசீர் ஷா. இவருடைய நண்பர் ஃபர்ஹான் 14 வயது சிறுமியை துப்பாக்கி முனையில் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் படம் எடுத்து அந்த சிறுமியை மிரட்டியுள்ளார். இதுகுறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என்றும் மீறி தெரிவித்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என சிறுமியை யாசீர் ஷா மிரட்டியுள்ளார். இந்நிலையில் இஸ்லாமாபாத்தில் உள்ள ஷலிமார் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி புகார் அளித்துள்ளார் .இந்த புகாரின் அடிப்படையில் யாசீர் ஷா மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர் .

‘நான் மிகவும் செல்வாக்கு மிக்கவர் என்றும், எனக்கு உயர் பதவியில் இருக்கும்  ஒருவரைத் தெரியும் என்றும் யாசீர் ஷா கூறியுள்ளார். மேலும் யாசீர் ஷா அவருடைய நண்பர்கள் இருவரும் வீடியோக்களை உருவாக்கி வயது குறைந்த சிறுமிகளை பலாத்காரம் செய்கின்றனர் ‘என பாதிக்கப்பட்ட சிறுமி பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார் . இந்நிலையில் இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறும்போது,” இது தொடர்பான தகவல்களை திரட்டி வருகிறோம். உண்மையை குறித்து முழுமையான தகவல் கிடைத்த பிறகு கருத்து தெரிவிக்கப்படும்” தெரிவித்துள்ளது .இதுவரை பாகிஸ்தான் அணிக்காக 46 டெஸ்டில் விளையாடியுள்ள  யாசீர் ஷா 235 விக்கெட் கைப்பற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |