சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 18 வயதுடைய சிறுமி வசித்து வருகிறார். இவர் துணி கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அதே துணிக்கடையில் ஊழியராக வேலை பார்க்கும் அம்பேத்கர் நகர் பகுதியில் வசிக்கும் நவீன்குமார் என்பவருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அப்போது நவீன்குமார் சிறுமியிடம் உன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகின்றது. பின்னர் சிறுமி நவீன்குமாரை சந்தித்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி உள்ளார். ஆனால் அதற்கு நவீன்குமார் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நவீன்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.