மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் சென்ற 16-ம் தேதியன்று இரவு வேளையில் 16 வயதான சிறுமியை கூட்டுப் பாலியல் வன் கொடுமை செய்திருக்கின்றனர். அதாவது, சிறுமியை கடத்திய 8 பேர் கொண்ட கும்பல் கடற்கரை கிராமத்திலுள்ள பங்களாவுக்கு அழைத்துச் சென்று அவரை பாலியல் வன் கொடுமை செய்துள்ளனர். மேலும் சிறுமியை கடற்கரைக்கு அழைத்து வந்து மீண்டும் பாலியல் வன் கொடுமை செய்து உள்ளனர்.
அதன்பின் அந்த கும்பல், சிறுமியை அங்கேயே விட்டு விட்டு சென்றதாக தெரிகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதனடிப்படையில் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நேற்று (டிச.18) காலையில் சம்மந்தப்பட்ட 8 பேரையும் கைது செய்தனர். இவ்வாறு சிறுமியை 8 பேர் கொண்ட கும்பல் பாலில் வன்கொடுமை செய்திருக்கும் சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..