Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“திருமணம் செய்து கொள்கிறேன்” சிறுமிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

சிறுமியை பலாத்காரம் செய்த டிரைவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள மணக்கரை கிராமத்தில் ஞானசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராதாகிருஷ்ணன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ராதாகிருஷ்ணன் 17 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ராதாகிருஷ்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா கூறியதாவது, இதுபோன்ற பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்து வருகிறது. இதனால் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை அன்புடனும் அரவணைப்போடும் வைத்திருக்க வேண்டும். இதனைத் தொடர்ந்து பல்வேறு கிராமங்களில் காவல்துறையினர் பெண்கள் பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இது விழிப்புணர்வு மட்டுமல்ல மேலும் இது போன்ற குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும் தான் என்பதை பெற்றோர்கள் உணர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |