Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஏரியில் கிடந்த குழந்தையின் சடலம்…. விசாரணையில் தெரியவந்த உண்மை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

அண்ணனின் மகளை பாலியல் பலாத்காரம் செய்த சித்தப்பாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்திலுள்ள வானமாதேவி வீராணம் ஏரிக்கரையில் பச்சிளம் குழந்தை இறந்து கிடந்துள்ளது. இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் கமல் என்பவர் பெற்றோரை இழந்து தனியாக வசித்து வந்த அண்ணனின் மகளான 17 வயது சிறுமியை மிரட்டி ஒரு வருடமாக அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.

இதனால் கர்ப்பமான சிறுமிக்கு இறந்த நிலையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அடுத்து கமல் கூறியதற்கு இணங்க அந்த குழந்தையை சிறுமி ஏரிக்கரையில் வீசி சென்றது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கமலை கைது செய்துள்ளனர்.

Categories

Tech |