சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள குத்தாலம் அருகாமையில் வில்லியநல்லூர் பகுதியில் ஷோபனா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசுப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் அதே பகுதியில் வசிக்கின்ற மாமா வீட்டிற்கு போயிட்டு வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார். அதன் பின் நீண்ட நேரமாகியும் சிறுமி திரும்பி வராத காரணத்தினால் உறவினர்கள் எல்லா பகுதியிலும் தேடிக் கிடைக்காத நிலையில் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். பின்னர் சிறுமியின் மாமா வீட்டிற்குப் பின்னால் இருந்த வாய்க்காலில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததை கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து சிறுமியின் உறவினர் பிரபாகர் என்பவர் அவரை காதலித்து பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததும், பின் அவரை கொலை செய்து வாய்க்காலில் வீசி விட்டு தப்பி சென்றது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பிரபாகரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.