மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்திலுள்ள காட்பாடி தாலுகாவில் இருக்கும் பெரிய ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் பொக்லைன் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பள்ளி மாணவியை திருமணம் செய்வதாக கூறி மணிகண்டன் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார்.
இதனை அடுத்து சிறுமியின் பெற்றோர் மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்துள்ளனர்.