8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 8 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சிறுமி வீட்டில் தனியாக இருந்ததை தெரிந்து கொண்ட அதே பகுதியில் வசிக்கும் ஜான்பால் என்பவர் வீட்டின் மாடிக்கு தூக்கிச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால் பயந்து அலறிய சிறுமியின் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து ஜான்பாலை பிடித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த அனைத்து மகளிர் காவல்துறையினர் ஜான்பாலை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.