Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு ஏற்பட்ட வயிறு வலி…. மெக்கானிக் செய்த செயல்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மெக்கானிக்கை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள காயல்பட்டினம் பகுதியில் 8-ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்நிலையில் அந்த சிறுமி தனது தாயாரிடம் வயிறு வலிப்பதாக கூறியுள்ளார். இதனையடுத்து அவரது தாயார் அந்த சிறுமியை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சிறுமியிடம் விசாரித்ததில் ஏசி மெக்கானிக்கான காயல்பட்டினம் பகுதியில் வசிக்கும் ரியாஸ் சாலிஹான் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சிறுமியின் தாயார் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |