சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2020-ஆம் ஆண்டு திருப்பூரில் வசித்த போது அதே பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் திருப்பூர் வடக்கு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்தப் புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பிரபுவை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இது குறித்த வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் பிரபுவிற்கு நீதிபதி ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் ஜமீலா பானு ஆஜராகி வாதாடினார்.