Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. தந்தை அளித்த புகார்…. வடமாநில வாலிபர் கைது….!!

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வடமாநில வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

அசாம் மாநிலத்தில் ஹரிபிரசாத் கேத்ரபால் என்பவர் வசித்து வருகிறார். இவர் தூத்துக்குடியிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஹரிபிரசாத் கேத்ரபால் அப்பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் தந்தை புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஹரிபிரசாத் கேத்ரபாலை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |