சிறுமியின் ஆடைக்கு கீழ் தவறாக புகைப்படம் எடுத்த நபருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி லியோன் சான் என்ற 26 வயது நபர் ரயில் பயணம் செய்தார் . அதே ரயிலில் பள்ளி சிறுமி ஒருவரும் பயணம் செய்தார். அப்போது லியோன் ரயிலின் கதவிற்கு அருகில் நின்று கொண்டு ரகசியமாக செல்போனின் கேமராவை ஆன் செய்து சிறுமியின் ஆடைக்கு கீழே தவறாக புகைப்படம் எடுத்துள்ளான்.மேலும் அவன் சிறுமிக்கு அருகில் சென்று பல்வேறு விதமாக தவறாக புகைப்படம் எடுத்து விட்டு ரயிலை விட்டு இறங்கி சென்றுள்ளான்.
லியோன் செய்த இந்த கேவலமான செயல் ரயிலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. ஒருவர் தன்னுடைய செல்போனில் வீடியோ அல்லது புகைப்படம் எடுக்கும் பொழுது ஒரு வகையான ஒளி போனில் மின்னும். அது லியோனின் போனில் மின்னியது கண்டறியப்பட்டுள்ளது. இதை அனைத்தையும் கண்காணிப்பு கேமராவில் கவனித்த காவல்துறையினர் லியோனை கைது செய்து தொலைபேசியை ஆய்வு செய்தபோது அதில் 1700க்கும் மேற்பட்ட இளம் பெண்களின் புகைப்படங்கள் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து லியோனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி லியோனுக்கு ஒரு வருடம் 8 மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும் பாலியல் குற்றவாளிகள் கையெழுத்திடும் பதிவேட்டில் 10 ஆண்டுகள் தொடர்ந்து கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிட்டார்.