Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இருவருக்கும் நடந்த ரகசிய திருமணம்…. உறவினர்களின் அளித்த தகவல்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

சிறுமியை திருமணம் செய்த சிறுவனை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

கோயம்புத்தூர் பகுதியில் 17 வயது சிறுவன் ஒருவன் வசித்து வருகிறான். இந்நிலையில் அந்த சிறுவனும் அதே பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமியும் காதலித்து வந்துள்ளனர். இதனையடுத்து திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் பகுதியில் வசிக்கும் உறவினர் வீட்டிற்கு அந்த சிறுமி வந்துள்ளார். அப்போது சிறுவன் அந்த சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றுள்ளான். இந்நிலையில் அவர்கள் இருவரும் பெற்றோர்களுக்கு தெரியாமல் ரகசிய திருமணம் செய்துள்ளனர். இந்த ரகசிய திருமணம் செய்தது உறவினர்களுக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவர்களது பெற்றோர்களுக்கு உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த அவர்களது பெற்றோர்கள் பல்லடம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் சிறுவன் அந்த சிறுமியை திருமணம் செய்து பாலியல் துன்புறுத்தல் செய்தது தெரியவந்துள்ளது. இந்நிலையில் காவல்துறையினர் சிறுவன் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து திருப்பூர் முதன்மை நடுவர் இளஞ்சிறார் நீதிகுழுமத்தில் ஆஜர்படுத்தினர். இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் அந்த சிறுவன் கோவையில் உள்ள கூர்நோக்கு மையத்தில் சேர்க்கப்பட்டார்.

Categories

Tech |