சிறுமியை திருமணம் செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாயர்புரம் நடுவக்குறிச்சி பகுதியில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சதீஷ்குமார் என்ற மகன் உள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சதீஷ் குமாரும் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சதீஷ்குமாரை கைது செய்தனர்.