சட்டத்தை மீறி 17 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு ராஜேந்திரன் என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் ராஜேந்திரன் 17 வயது சிறுமியை இருவீட்டு பெற்றோர்களின் அனுமதியின்றி திருமணம் செய்துள்ளார். இதனையடுத்து 6 மாத கர்ப்பிணியான சிறுமி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
அப்போது அவருக்கு சிகிச்சை அளித்த செவிலியர்கள் ஆதார் அட்டையில் சிறுமிக்கு 17 வயதே ஆனது என்பதை கண்டறிந்தனர். இதனை அடுத்து செவிலியர்கள் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய குற்றத்திற்காக ராஜாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.