சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளியை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டத்திலுள்ள ஜலகண்டாபுரம் பகுதியில் கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவர் தன்னுடைய அக்காள் மகளான அதே பகுதியில் வசித்து வரும் 14 வயதுள்ள சிறுமியை ஆசை வார்த்தைகளைக் கூறி திருமணம் செய்துகொண்டார். இதனையடுத்து தொழிலாளி, சிறுமியை கட்டாயப்படுத்தி கற்பழித்ததாக தெரிகிறது. இதன் காரணமாக அந்த சிறுமி கர்ப்பமாக இருக்கிறார். இதுகுறித்து புகாரின்படி அனைத்து மகளிர் காவல்துறையினர் தொழிலாளி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.