அன்புகாட்டி சிறுமியை கொன்ற ஆசிரியரை போலீசார் ரயிலில் வைத்து கைது செய்துள்ளனர்.
ரஷ்யாவைச் சேர்ந்த 40 வயதான உலியானா லான்ஸ்காயா ஆசிரியராக உள்ளார். இவர் 9 வயது மாணவியான Sofia Zhavoronkova மற்றும் அவரது தோழிகளை அன்பு காட்டி ஆசை வார்த்தை கூறி இனிப்பு, ஐஸ்கிரீம் போன்ற தின்பண்டங்களை சாப்பிட வாங்கி கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து திடீரென்று சோபியா காணாமல் போயுள்ளார். இதனால் அவளின் பெற்றோர் போலீசாருக்கு புகார் அளித்துள்ளனர்.
இதனை அடுத்து 272 தன்னார்வலர்களின் உதவியுடன் போலீசார் சிறுமியை தேடும் பணியை தீவிரமாக தொடங்கியுள்ளனர்.இதுமட்டுமின்றி கடைசியாக Sofiaவுடன் இருந்த குழந்தையை விசாரித்துள்ளனர். அந்த குழந்தை கூறியதை வைத்து ஆசிரியர் லான்ஸ்காயா வீட்டிற்கு போலீசார் விரைந்து சென்றுள்ளனர். ஆனால் அவரின் வீடு பூட்டப்பட்டு இருந்ததால் கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர்.
அங்கு சிறுமி Sofiaவின் முகம், தலை போன்ற பகுதிகள் சிதைக்கப்பட்டு மிகவும் கொடுமைக்கு ஆளான நிலையில் அவளின் சடலத்தை போலீசார் மீட்டுள்ளனர்.இதற்கிடையில் ஆசிரியர் லான்ஸ்காயா ரயிலில் பயணம் மேற்கொண்டுள்ளார். அவரை இன்னொரு போலீஸ் குழுவினர் கைது செய்துள்ளனர். மேலும் தமது சொந்தப் பிள்ளைகளை வளர்க்கும் விவகாரத்தில் அதிகாரிகள் தனக்கு தடை விதித்ததாகவும் அதற்கு பழிவாங்கும் விதமாக தான் இந்தக் காரியத்தை செய்தேன் என்று போலீசாரிடம் ஆசிரியர் கூறியுள்ளார்.