15 வயது சிறுமியிடம் இளைஞர் ஒருவர் தவறான முறையில் நடந்து கொண்ட சம்பவம் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த Isaih Ramirez என்ற 20 வயது நபருடன் 15 வயது சிறுமி ஒருவர் நட்புடன் பழகி உள்ளார். அதற்குப் பிறகு கடந்த 2019ஆம் ஆண்டு Isaih Ramirez அந்த சிறுமியுடன் டேட்டிங் சென்றுள்ளார். டேட்டிங் சென்ற இடத்தில் அவர் 15 வயது சிறுமிக்கு முத்தம் கொடுத்ததுடன் தவறான முறையில் நடந்துள்ளார் . இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு Isaih Ramirez செய்த மோசமான செயல் வெளியில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு Isaih- வை கைது செய்வதற்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் அவரை கைது செய்தனர். வரும் திங்கட்கிழமை நீதிமன்றத்தில் Isaih முன்னிலைப்படுத்தப்படவுள்ள நிலையில் அவரது ஜாமீன் தொகையை 3,00,000 டாலராக காவல்துறையினர் நிர்ணயம் செய்துள்ளனர்.