Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சிறுமியின் ஆபாச புகைப்படம்… இரு குடும்பத்தினரிடையே மோதல்… பெற்றோரின் பரபரப்பு புகார்…!!

சிறுமியை ஆபாசமாக புகைப்படம் எடுத்த பா.ஜ.க. நிர்வாகி ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரியலூர் மாவட்டம் இலைக்கடம்பூர் பகுதியில் அசோக்குமார் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் பா.ஜ.க. ஒன்றிய பொது செயலாளராக இருக்கின்றார். அதே பகுதியில் 16 வயதுடைய சிறுமி ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் அந்த சிறுமியை அசோக்குமார் தனது செல்போனில் ஆபாசமாக புகைப்படம்  எடுத்து அந்த புகைப்படத்தை சிறுமியிடம் காண்பித்து  மிரட்டியுள்ளார். இதனையடுத்து  அந்த சிறுமி தனது பெற்றோரிடம் நடந்தவைகளை தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக அசோக்குமாரின் வீட்டிற்கு சென்று அவரது பெற்றோரிடம் கூறியுள்ளனர்.

ஆனால் அவரது பெற்றோர் தன்னுடைய மகன் இவ்வாறு செய்ய மாட்டான் என்று மறுப்பு தெரிவித்ததால் இரு குடும்பத்தினருக்கும்  இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சிறுமியின் பெற்றோர் உடனடியாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின்படி காவல்துறையினர் அசோக் குமாரின் செல்போனை கைப்பற்றி அதில் சிறுமியின் புகைப்படம் எடுக்கப்பட்டதா இல்லையா என்ற விபரம் குறித்து அறிய தடவியல் சோதனைக்கு அனுப்பி உள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்த காவல்துறையினர் அசோக் குமாரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |