சிறுமியை கடத்திய சிறுவனை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தீத்தாம்பட்டி கிராமத்தில் 17 வயது சிறுவன் வசித்து வருகிறான். இந்நிலையில் அந்த சிறுவன் ராஜிவ் நகர் பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியை கடத்தி சென்றுள்ளான். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த அணைத்து மகளிர் காவல்துறையினர் சிறுவன் மற்றும் சிறுமியை உடனடியாக மீட்டு விசாரணை நடத்தினர். அதன்பிறகு சிறுமியை மருத்துவ பரிசோதனை செய்த பிறகு பெற்றோரிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.