சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவனை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை பகுதியில் 16 வயது சிறுவன் வசித்து வருகிறான். இவன் அப்பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளான்.
இதுகுறித்து தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோர் உடுமலை அணைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த அனைத்து மகளிர் காவல் துறையினர் சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.