17 வயதுடைய சிறுவன் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயம்கொண்டான் பகுதியில் 17 வயதுடைய சிறுவன் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். அதே பகுதியில் 17 வயதுடைய சிறுமி தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர்கள் இருவரும் பழகி வந்துள்ளனர். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் அந்த சிறுவன் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டார்.
இதனையடுத்து அழுது கொண்டே சிறுமி தனது பெற்றோரிடம் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் தெரிவித்துவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின்படி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்த காவல்துறையினர் சிறுவனை உடனடியாக கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.