Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சிறுவன் செய்யுற வேலையா இது… 12 வயது சிறுமிக்கு நடந்த விபரீதம்… பெற்றோரின் பரபரப்பு புகார்…!!

சிறுமியை பலாத்காரம் செய்த சிறுவனை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயம்கொண்டான் பகுதியில் 12 வயதுடைய சிறுமி ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்த சிறுமி தனது வீட்டில் தனியாக விளையாடிக் கொண்டிருந்தார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் 17 வயதுடைய சிறுவன் அந்த சிறுமியை தன்னுடன் விளையாடுவதற்கு அழைத்தார். இதனையடுத்து அந்த சிறுமியும் அவருடன் விளையாட சென்றபோது அந்த சிறுவன் கட்டாயப்படுத்தி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துயுள்ளான்.

அதன்பின் அந்த சிறுமி அழுது கொண்டே நடந்த அனைத்து சம்பவத்தையும் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின்படி காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து அந்த சிறுவனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |