Categories
உலக செய்திகள்

சிறுவனின் சடலம் கண்டெடுப்பு…. மனநலம் பாதித்தவர் செய்தாரா…? சந்தேகத்தில் போலீசார்…!!

சிறுவனை கொன்ற வழக்கில்  மனநலம் பாதிக்கப்பட்டவர் போலீசாரால்  சூட்டுக் கொல்லப்பட்டார்.

பிரான்ஸ் நாட்டில் Marseille என்ற பகுதியில் ஒரு சிறுவன் காணாமல் போனதாக  காவல்நிலையத்தில் அவனது பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில் பிரான்சில் Tarascon  என்ற பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு சிறுவனின் தலையற்ற உடல் போலீசாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து மனநலம் பாதித்த ஒருவரின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தியுள்ளனர். அங்கு அந்த வீட்டில் சிறுவனின் தலை மற்றும் கைகள் ஒரு பையில் கிடைத்துள்ளன. இது அந்த காணாமல் போன சிறுவனுடையது தானா என்று போலீசார் இன்னும் உறுதி செய்யவில்லை.

மேலும் தலையின் பாதி பாகங்கள் காணவில்லை என்பதால் அவர் அதை சாப்பிட்டு இருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து அந்த வீட்டில் பயங்கரமான ஆயுதங்கள் மற்றும் பொருள்கள் இருந்துள்ளன. இதனையடுத்து போலீசார் அந்த மனநல பாதிக்கப்பட்ட நபரை தேடி கண்டுபிடித்து அவர் இருக்கும் இடத்தை அடைந்தனர். அந்த சமயத்தில் அவர் தப்பிக்க முயற்சி செய்து கூரையில் ஏறிய போது போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனை அடுத்து போலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட  நபர் தான் சிறுவனை கொலை செய்தாரா என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

Categories

Tech |