கால்பந்து வீரர் ஒருவருக்கு 9 வயது சிறுவன் எழுதிய கடிதம் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி நாட்டையே உருக வைத்துள்ளது.
யூரோ கால்பந்து இறுதிப் போட்டியானது லண்டனில் உள்ள Wembley மைதானத்தில் நடைபெற்றது. இந்த இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் இத்தாலி அணிகள் மோதின. இதனை தொடர்ந்து இத்தாலி அணிக்கு எதிராக பெனால்டி அளிக்கப்பட்ட மூவரும் கறுப்பினத்தைச் சேர்ந்தவர்கள். மேலும் அவர்கள் வாய்ப்பை தவற விட்டதால் நாடு முழுக்க விமர்சனங்கள் மற்றும் இனவாத தாக்குதல்களுக்கு ஆளாகினர். அதிலும் முக்கியமாக எம்.பி.இ பட்டம் பெற்ற மார்க்கஸ் ரஷ்ஃபோர்ட் என்பவர் இங்கிலாந்து ராணியிடமிருந்து கடுமையான விமர்சனங்களை பெற்றுள்ளார். இந்த சூழலில் டெக்ஸ்டெர் ரொஷியர் என்ற ஒன்பது வயது சிறுவன் மார்க்கஸ்க்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளான். அந்த கடிதமானது செய்தி நிலையம் ஒன்றில் தொகுத்து வழங்கப்பட்டது.
இதனை அடுத்து அந்த கடிதத்தில் கூறியதாவது “அன்புள்ள மார்க்கஸ் நீங்கள் பல ஆதரவற்ற மக்களுக்கு உதவி செய்து வருவது என்னை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் பல விமர்சனங்களை பொறுமையாக எதிர்கொள்வது என்னை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது. நான் உங்களை எண்ணி மிகவும் பெருமை கொள்கிறேன். மேலும் நீங்கள் மற்றவர்களிடம் இருந்து வரும் கடுமையான கருத்துகளை புறக்கணியுங்கள். நீங்கள் எப்போதும் எங்களின் நாயகன்” என்று அந்த சிறுவன் எழுதியுள்ளான். இந்த கடிதத்தை வாசித்த செய்தி வாசிப்பாளர் சுசண்ணா ரெய்டு அடக்க முடியாமல் நேரலையில் அழுதுள்ளார். மேலும் அவருடன் இருந்த மற்றொரு ஊடகவியலாளரான ரன்வீர் சிங் என்பவரும் கண்கலங்கி உள்ளார்.