Categories
உலக செய்திகள்

தேவாலயத்துக்கு சென்ற சிறுவர்கள்… 7 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த தன்னார்வலர்… கனடாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

7 ஆண்டுகளாக 2 சிறுவர்களிடம் தவறாக நடந்து கொண்ட தன்னார்வலரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கனடாவிலுள்ள ரொறன்ரோவில் மிஷன் கிறிஸ்டியனா வோஸ் டி என்ற தேவாலயம் உள்ளது. இங்கு ஜோஸ் போர்டிலோ என்ற 62 வயது நபர் தன்னார்வலராக இருக்கிறார். இந்நிலையில் தேவாலயத்திற்கு வரும் 18 வயதுக்கு குறைவான 2 சிறுவர்களிடம்  நீண்ட நாட்களாக ஜோஸ் தவறாக நடந்து கொண்டதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

தகவலின்பேரில் காவல்துறையினர் ஜோஸ் -ஐ கைது செய்து விசாரணை நடத்தியதில் 2013ஆம் ஆண்டிலிருந்தே அவர் இது போன்ற குற்ற சம்பவத்தில் ஈடுவதாக தெரியவந்துள்ளது. இதனால் அவர் மீது காவல்துறையினர் பத்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் இவரால் பலர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகித்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களிடம் வந்து  புகார் அளிக்கலாம்  என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |