அமெரிக்காவில் உள்ள விர்ஜினியாவை சேர்ந்த பிராண்டன் என்பவர் சிறுவயதிலிருந்து வறுமையில் போராடி வந்த நிலையில் தற்போது கோடீஸ்வரராக மாறியுள்ளார் .
அமெரிக்காவை சேர்ந்த பிராண்டன் காண்டி(25) என்பவருக்கு சிறுவயதிலேயே தந்தை கிடையாது. தாய் கஷ்டப்பட்டு வேலை பார்த்து தான் அவரை வளர்த்தார்.பிறகு தாய்க்கு வேலை பறிபோன நிலையில் வாடகை வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் தற்போது அவர் இரண்டு ஆண்டுகளிலேயே இன்ஸ்டாகிராம் மார்க்கெட்டிங் ஏஜென்சி மற்றும் சில தொழில்கள் மூலம் கோடீஸ்வரராகி உள்ளார். விலை உயர்ந்த ஆடைகள்,சொகுசு கார் ,வீடு என்பதாக அவரின் வாழ்க்கையே மாறியுள்ளது.
பிராண்டன் கூறுகையில் வீடு இல்லாமல் இருக்கும் போது தன் நண்பர்கள் யாரவது இடம் தர மாட்டார்களா என்று இடம் தேடி அலைந்திருக்கிறேன். தங்க இடம் இல்லாத போது சில சமயம் பொது கழிவறையை கூட பயன்படுத்தி இருக்கிறேன்.மேலும் சிறு வயதில் சம்பாதித்த பணத்தை கொஞ்சம் சேமித்த வைத்ததாகவும் கூறியுள்ளார். அவரின் வளர்ச்சியை பற்றி கூறுகையில் ‘உங்களை மட்டும் நம்புங்கள் அதுவே போதும்’ தற்போது தன் தாய்க்காக பெரிய வீட்டை கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இன்ஸ்டாகிராமில் செய்து வரும் வேலை மூலமாக பிரண்டனுக்கு மாதம் $25,000 லாபம் கிடைப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.