Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

எஸ்.ஐ. வில்சனை கொன்றது ஏன்?- குற்றவாளிகள் பகீர் வாக்குமூலம் ..!

காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது  செய்யப்பட்ட குற்றவாளிகள் அப்துல் சமீம் மற்றும் தவ்பீக் ஆகிய இரண்டு பேரிடமும்  கியூ பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில், வில்சனை கொன்றதற்கான காரணத்தை இருவரும் கூறி உள்ளனர்.

குமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் கடந்த 8-ம் தேதி இரவு பணியிலிருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் படுகொலை செய்யப்பட்டார். அங்குள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது 2 பேர் வில்சனை கொலை செய்தது தெரியவந்தது.

இதை அடிப்படையாகக் கொண்டு கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அப்துல் சமீம், தவ்பீக் ஆகியோர் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். மேலும் அவர்கள் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு சன்மானம் வழங்கப்படும் என்றும் தமிழ்நாடு காவல் துறை அறிவித்தது.

இந்த வழக்கை என்.ஐ.ஏ. அலுவலர்களும் தீவிரமாகக் கண்காணித்துவந்தனர். குமரி மாவட்டம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பிற பகுதிகள், கேரளா ஆகிய இடங்களிலும் அப்துல் சமீம், தவ்பீக் ஆகியோரின் உறவினர்கள், நண்பர்கள் என 120க்கும் மேற்பட்டோரை பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

ssi wilson murder, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன்

இந்நிலையில் கர்நாடக மாநிலம் உடுப்பியில் அப்துல் சமீம், தவ்பீக் ஆகிய இருவரையும் கர்நாடக மாநில காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்ட போலீசார் இரண்டு பேரையும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கியூ பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில், வில்சனை கொன்றதற்கான காரணத்தை இருவரும் கூறி உள்ளனர்.

தங்களது அமைப்பை சேர்ந்தவர்களை போலீஸ் தொடர்ந்து கைது செய்து வந்ததால்  கொன்றதாக கூறி உள்ளனர்.  மேலும் தங்களையும் போலீஸ் குறிவைத்து சுட்டுக் கொல்லலாம் என்பதால்  தங்களது எதிர்ப்பை காட்டவே , இந்த கொலையை செய்ததாக கூறியுள்ளனர். விசாரணைக்குப் பிறகு இன்று இருவரும், நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

Categories

Tech |