கன்னியாகுமரி சிறப்பு SI வில்சன் கொலை வழக்கு NIA_வுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் கொலைசெய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக போலீசார் உபா சட்டத்தில் வழக்கு பதிவு செய்து அப்துல் சமீம், தவுபிக் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் இந்த வழக்கு NIA_வுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.