Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING: எஸ்.ஐ. வில்சன் கொலை : காயல்பட்டினத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை …!!

காயல்பட்டினத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜனவரி 8ஆம் தேதி இரவு கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகேயுள்ள படந்தாலு மூடு சோதனைச் சாவடியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். தௌபீக், முகமது சமீம் உள்பட 4 பேர்  இந்தக் கொலையில் தொடர்புடையதாக போலீசார் கைது செய்தது.

இதையடுத்து தௌபீக், முகமது சமீம் உள்பட 4 பேரிடம் நடத்திய விசாரணையில் காயல்பட்டினத்தில் மொய்தின் பாத்திமா என்பவரின் வீட்டிற்கு இவர்கள் வந்ததாக தெரியவந்தது.

இதை தொடர்ந்து காயல்பட்டினம் வந்த என்.ஐ.ஏ அதிகாரிகள் மொய்தின் பாத்திமா என்பவரின் வீட்டில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |