உடல் எடையைக் கட்டுக்குள் வைத்தாலே, பல்வேறு நோய்கள் வராமல் தடுத்து விடலாம். இதற்குத் துணைபுரிவது சூரிய முத்திரை. யோகப் பயிற்சியில் சூரிய நமஸ்காரம் செய்யும் பலனை இந்த முத்திரை அளிக்கும்.
நமது மோதிர விரலைப் பெருவிரலின் அடிப்பாகத்தில் தொடும்படி வைத்துப் பெருவிரலை வைத்துப் படத்தில் காட்டியுள்ளபடி இலேசாக அழுத்த வேண்டும். மற்ற விரல்களை நேராக நீட்டி வைத்துக்கொள்ள வேண்டும். இந்த முத்திரையைத் தினமும் அதிக பட்சம் 45 நிமிடங்களும், குறைந்த பட்சம் 15 நிமிடங்களாவது செய்வது நல்ல பலனைத் தரும்.
சூரிய முத்திரையினால் ஏற்படும் பயன்கள்:
உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கும்.
உடல் பருமன் குறைந்து உடல் எடை குறையும்.
ஜீரண சக்தியை அதிகரித்து மலச்சிக்கலை போக்கும்.
தைராய்டு நோயை நீக்கும்.
தடுமன், தலைவலி, நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களை நீக்கும்.
உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
உடல் குளிர்ந்து போவதையும், குளிர் காய்ச்சலை போக்கும்.