வாடகை செலுத்த முடியாமல் சீதா கிங்ஸ்டன் பள்ளியை இந்து சமய அறநிலைத்துறை ஏற்று நடத்தும் என அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.
சென்னை அமைந்தகரை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் கடந்த 100 ஆண்டுகளாக சீதா கிங்ஸ்டன் ஹவுஸ் மெட்ரிக் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளிக்கூடத்தின் 1500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். 60 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த பள்ளியை வரும் 31-ஆம் தேதியுடன் மூடப் போவதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்திருந்தது. இதனால் பெற்றோர்கள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர். பல வருடங்களாக இந்த பள்ளி இயங்கி வருகின்றது.
1999ஆம் ஆண்டுடன் இந்தப் பள்ளிக்கான ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து அதிக அளவு வாடகையை உயர்த்தியதன் காரணமாக, இந்துசமய அறநிலையத் துறையும், இந்தப் பள்ளியும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு 20 வருடங்களாக நடந்தது. தற்போது பள்ளி நிர்வாகம் தரப்பில் இருந்து 31ஆம் தேதியுடன் பள்ளிகளை மூட போவதாக அறிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து மாணவர்கள் போராட்டம் நடத்திய காரணத்தினால் இந்த பள்ளியை சமய அறநிலையத் துறையே நடத்தும் என அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.