Categories
தேசிய செய்திகள்

நாளை ஜம்மு-காஷ்மீர் செல்கின்றார் சீதாராம் யெச்சூரி ….!!

உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி நாளை ஜம்மு காஷ்மீர் செல்கின்றார்.

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்து இரத்து செய்யப்பட்டு இரண்டு யூனியன் பிரதேஷமாக மத்திய அரசு அறிவித்ததில் இருந்து  அங்கு பதற்றமான சூழ்நிலை நீடித்து வருகின்றது. அங்குள்ள அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஜம்முவிற்கு அரசியல் தலைவர்கள் யாரும் வர கூடாது என்று மாநில ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார். இதனிடையே கடந்த 9_ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, டி.ராஜா ஜம்மு காஷ்மீர் செல்ல முற்பட்ட போது ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.அதில் தங்கள் கட்சியை சேர்ந்த யூசுப் தரிகாமியை சந்திப்பதற்கு ஜம்மு காஷ்மீர் செல்ல வேண்டிஉள்ளது எனவே அனுமதி வழங்க வேண்டும் என்று கோரப்பட்டு இருந்தது. இந்த வழக்கின் விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது யெச்சூரி ஜம்மு காஷ்மீர் செல்ல அனுமதி அளித்து  உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதோடு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட கூடாது என்றும் அறிவுறுத்தியது. இதையடுத்து  சீதாராம் யெச்சூரி நாளை ஜம்மு-காஷ்மீர் செல்கின்றார்.

Categories

Tech |