சித்த மருத்துவமனையில் கணக்கில் வராத ஒரு கோடி ரூபாய் பணத்தை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் அறிவழகன் என்பவர் சித்த மருத்துவமனை நடத்தி வருகின்றார். இந்நிலையில் இவர் சித்த மருத்துவமனையில் ஆங்கில மருத்துவ முறையில் சிகிச்சை அளிப்பதாக மருத்துவ துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி மருத்துவத்துறை அதிகாரிகள் சித்த மருத்துவமனையில் சோதனை நடத்தியுள்ளனர். அந்த சோதனையில் மருத்துவமனையில் கணக்கில் வராத ஒரு கோடி ரூபாய் இருந்தது அதிகாரிகள் பார்த்துள்ளனர்.
மேலும் இதுபற்றி வருமான வரித்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி வருமான வரித்துறையினர் அறிவழகனிடம் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் விசாரணையில் ஒரு கோடி ரூபாய்க்கு அறிவழகனிடம் முறையான கணக்கு இல்லாதது தெரியவந்துள்ளது. இதனையடுத்து வருமான வரித்துறையினர் சித்த மருத்துவமனையில் சீல் வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அறிவழகனை கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த ஒரு கோடி ரூபாய் வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.