Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

கன்டெய்னர் லாரி மோதி விபத்து….சிதறிய கண்ணாடி துண்டுகள்….செங்கல்பட்டில் பரபரப்பு….!!

தேசிய நெடுஞ்சாலை மினி லாரியின் மீது கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில் சுமார் 20 நிமிடம்  போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கேளம்பாக்கத்திலிருந்து சென்னை நோக்கி கண்ணாடி பாட்டில்களை ஏற்றிக் கொண்டு ஒரு மினி லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் பூங்கா அருகில் சென்னை நோக்கி வந்த கன்டெய்னர் லாரி திடீரென கண்ணாடி பாட்டில்கள் ஏற்றி வந்த மினி லாரியின் பின்பக்கத்தில் பயங்கரமாக மோதியுள்ளது.

இதனால் மினி லாரியில் இருந்த கண்ணாடி பாட்டில்கள் உடைந்து சாலையின் நடுவே நான்கு புறமும் சிதறியது. இதனையடுத்து போக்குவரத்துதுறை அதிகாரிகள் உடனடியாக சாலையில் சிதறிக் கிடந்த பாட்டில்களை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தினால் 20 நிமிடம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Categories

Tech |