மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்த கோரிக்கை வைத்து அசோக் கெலாட் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்
கொரோனா தொற்றை தடுப்பதற்காக மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போதைய சூழலில் பிரதமர் மோடி அவ்வப்போது மாநில முதல்வர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வந்தார். தற்போது ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அளித்து வரும் நிலையில் பிரதமர் மோடி எந்த ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை என்று உள்துறை அமைச்சகத்தில் இருந்து அறிவிப்புகள் வந்தவண்ணம் உள்ளன. குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தொற்றை எதிர்த்து நிற்கும் நிலையில் பொருளாதார முன்னேற்றத்திலும் மாநில அரசு கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது.
கடந்த ஒரு மாதமாக தனது பதவியை தக்க வைப்பதில் அசோக் கெலாட் உறுதியாக இருந்த நிலையில், வரும் 14ஆம் தேதி சட்டசபையை கவர்னர் கூட்டுவதற்கு உத்தரவிட்டார் இதனால் நிம்மதி அடைந்த அசோக் கெலாட் தற்போது கொரோனாவை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளார். இதனைத்தொடர்ந்து பிரதமர் மோடிக்கு மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்துங்கள் என கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “ஊரடங்கு நீண்டுகொண்டே செல்லும் இத்தகைய சூழ்நிலையில் கொரோனா தொற்று மற்றும் பொருளாதார சிக்கலை எதிர் கொள்வதில் அதிக அளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது.
தொற்றைத் தடுக்கும் போரில் இந்தியா உறுதியான கட்டத்தில் இருக்கின்றது. அனைத்து மாநிலத்திலும் கொரோனா தொற்றை முழுவீச்சுடன் தடுப்பதற்கு முயற்சி செய்துவருகின்றனர். நாங்களும் தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க விடா முயற்சி எடுத்து வருகின்றோம். ஜூன் 17ல் 2.31 சதவீதமாக இருந்த இறப்பு விகிதம் ஆகஸ்ட் 1-இல் 1.62 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. பரிசோதனை திறனையும் அதிகரித்து 40,000 வரை உயர செய்துள்ளோம் நாளொன்றுக்கு 28 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது. அதோடு பிளாஸ்மா சிகிச்சையின் மூலம் தொற்றுக்கான சிகிச்சை முறையையும் வலுப்படுத்தியுள்ளோம்” எனக் குறிப்பிட்டிருந்தார்