சிவகார்த்திகேயன் வாழ்க்கை வரலாற்றை பற்றி இந்த வீடியோவில் காண்போம். சிவகார்த்திகேயன் ஒரு தென்னிந்திய திரைப்பட நடிகர், பின்னணிப் பாடகர் மற்றும் தயாரிப்பாளர் சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பப்படும் ஒரு தமிழ் திரைப்பட நடிகர் என்றால் சிவகார்த்திகேயன் தான். சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு என்ற நகைச்சுவை நிகழ்ச்சியின் மூலமாக அறிமுகமானவர். பின்பு கலக்கப்போவது நகைச்சுவை எதார்த்த நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக இருந்து அவர் ஊடக வாழ்க்கையை தொடங்கினார்.
மேலும் அவர் கலக்கப்போவது யாரு பட்டத்தையும் வென்றார். பின்பு அவரது நகைச்சுவை உணர்வை காண்பித்து விஜய் டிவியில் தொகுப்பாளராகவும் பணிபுரிந்தார். விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்து தமிழ் திரைபட உலகிற்கு நடிகராகவும் அறிமுகமானார். இவர் திருச்சியில் உள்ள ஜே.ஜே பொறியியல் கல்லூரியில் பயின்றார். மிமிக்ரி திறமை மூலம் விஜய் டிவியில் தொகுப்பாளராக சேர்ந்தார். பசங்க திரைப்படத்தில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி பிப்ரவரி 3 ஆம் தேதி 2௦12 ல் வெளிவந்த திரைப்படமான மெரினாவில் கதாநாயகனாக தன் திரையுலக வாழ்க்கையை தொடங்கினார்.
சிவகார்த்திகேயன் அப்பா பெயர் ஜிட்தாஸ் ஒரு போலீஸ் அதிகாரி ஆவார். சிவகார்த்திகேயன் அம்மா பெயர் ராஜிதாஸ். அவருக்கு ஒரு சகோதரி இருக்கிறார். சிவகார்த்திகேயன் அக்கா பெயர் கௌரி. சிவகார்த்திகேயனுக்கு இரண்டாம் 2010ஆம் ஆண்டு ஆர்த்தி என்ற பெண்ணுடன் திருமணம் ஆனது. அவருக்கு ஒரு மகள் உள்ளார். அவரின் பெயர் ஆராதனா. சிவகார்த்திகேயன் சிறு வயதாக இருக்கும் போதே அவரது தந்தை இறந்து விட்டார். அவர் தந்தை இறந்த பிறகு அவரது தாயார் தான் குடும்பத்தை கவனித்து வந்தார். தொலைக்காட்சியில் நுழைவதற்கு முன்பு பட்டப் படிப்பு முடிக்க அவருக்கு ஆதரவு அளித்த பின்பு 2010ஆம் ஆண்டு சிவகார்த்திகேயனுக்கும் ஆர்த்திக்கும் திருமணம் நடந்தது.
சிவகார்த்திகேயன் அக்டோபர் 22 2013 ஆம் ஆண்டு ஆராதனா என்ற மகள் பிறந்தார். சென்னையில் ஒரு தனியார் பள்ளியில் அவர் பயின்று வருகிறார். சிவகார்த்திகேயன் மிமிக்ரி திறமை மூலம் ஊடகத்துறைக்கு வந்து நடிகராக அறிமுகமாகி பின்பு பாடகராகவும் அறிமுகமானார். தற்போது தயாரிப்பாளராகவும் உருவமெடுத்திரிகிறார். இவர் நடித்த திரைப்படங்களில் பட்டியல் மெரினாவில் கதாநாயகனாகவும் ஆரம்பித்து மனங்கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் காக்கிச்சட்டை, மான்கராத்தே, ரஜினிமுருகன், ரெமோ, வேலைக்காரன், கனா, சீமராஜா போன்ற பல படம் இவர் நடிப்பில் வெளிவந்த படமாகும்.
மேலும் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ராயபுரம் பீட்டர், ரஜினி முருகன், எதுக்கு மச்சான் காதல் போன்ற பல பாடலை பாடியுள்ளார். விஜய் டிவி மூலம் அறிமுகமான சிவகார்த்திகேயன் தற்போது தென்னிந்திய திரை உலகில் ஒரு முக்கிய நட்சத்திரமாக திகழ்கிறார்.