விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் மூலமாக மக்களுக்கு அறிமுகமான சிவாங்கி குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பலர் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தார். தற்போது சிவகார்த்திகேயனின் டான் திரைப்படத்தில் நடித்து வரும் இவர் விஜய் டிவியின் காமெடி ராஜா ராணி நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குகிறார்.
இந்நிலையில் ஒரு மில்லியன் ஃபாலோவர்ஸ் கொண்டிருந்த சிவாங்கி தற்போது 4 மில்லியன் ஃபாலோவர்ஸ் பெற்றதால் தனது மகிழ்ச்சியை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இது தொடர்பான காணொளியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட சிவாங்கி தனது ரசிகர்களுக்கு நன்றி கூறியுள்ளார்.
https://www.instagram.com/tv/CUDMjGnBoHq/?utm_source=ig_web_copy_link