கொரோனா தொற்று இல்லாத மாவட்டமான சிவகங்கை மாறியுள்ளது.
இந்தியளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் 6-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் இதுவரை 2,526 கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 29 பேர் கோரோனோ வைரஸிற்கு பலியாகியுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக சிவகங்கை மாறியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 12 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 11 பேர் ஏற்கனவே குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் கடைசியாக சிகிச்சை பெற்று வந்த ஒருவரும் குணமடைந்தார்.
இதனால் சிவகங்கை மாவட்டம் நோய் தொற்று இல்லாத மாவட்டமாகிறது. ஏற்கனவே நீலகிரி மாவட்டம் மாறியுள்ளது. இதனிடையே இதுவரை கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமான கிருஷ்ணகிரியில் ஆந்திரா சென்று திரும்பிய ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் கொரோனாவில் இருந்து குணமடைந்த 6 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர்.
தென்காசி, நெல்லை மாவட்டத்தை சேர்ந்த தலா 3 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 3 பேர் குணமடைந்தனர். திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 2 பேரும், நாமக்கல்லை சேர்ந்த ஒருவரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.