சட்டவிரோதமாக மது விற்றதாக 4 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்துகிறார்கள்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியில் பல்வேறு இடங்களில் காவல்துறையினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக 4 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களின் பெயர்கள் பின்வருமாறு.
தாயமங்கலம் என்னும் இடத்தில் அழகு, இளையான்குடி புறவழிச்சாலையில் கோட்டையூர் என்னும் இடத்தில் நாகராஜ், அதிகரி பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் உடையார் ஆகிய நாலுபேர் ஆவர். மூன்று பாட்டில்களையும் 1350 ரூபாயையும் காவல்துறையினர் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்தனர்.