Categories
சினிமா தமிழ் சினிமா

“இந்தப் படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு இவங்கதான் ஜோடியா”…? யார் தெரியுமா..?

சிவகார்த்திகேயன் டான் படத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியது. இதைத்தொடர்ந்து மற்ற கதாபாத்திரங்களில் யார் நடிக்கிறார்கள் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தை சிபிசக்கரவர்த்தி இயக்க, லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கு அனிருத் இசையமைக்கிறார். எஸ்.ஜே. சூர்யா இப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இப்படத்தில் வில்லனாக நடிப்பாரா என்பது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி படத்தில் நடிக்கவுள்ளார். இதை தொடர்ந்து நகைச்சுவை நடிகர் சூரி இப்படத்தில் இணைய உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. வருத்தப்படாத வாலிபர் சங்கம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, ரஜினிமுருகன், நம்ம வீட்டு பிள்ளை போன்ற பல படங்களில் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்த சூரி காம்போ ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.

இந்தப் படத்திலும் இவர்கள் இணைந்து நடிக்கவுள்ளனர். இதைத்தொடர்ந்து நாயகி பிரியங்கா மோகன் இப்படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே டாக்டர் திரைப்படத்தில் சிவா பிரியங்கா கூட்டணி உருவாகி ரிலீசுக்கு காத்து உள்ளது. இதை தொடர்ந்து படத்தின் இரண்டாம் முறையாக இவர்கள் இருவரும் இணைய உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

Categories

Tech |