ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டமானது வட்டார துணைத்தலைவர் செல்வி தலைமையில் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மறுபடியும் பழைய இடத்திற்கு பணி மாற்றம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது.
இதில் கல்வி மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன், வட்டார செயலாளர் சுரேஷ் ஆரோக்கியராஜ், மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன், கூட்டுறது சங்கத் தலைவர் பால்துறை, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.