Categories
சினிமா தமிழ் சினிமா

சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’… நிறைவடைந்த படப்பிடிப்பு… கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு …!!!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வந்த ‘டாக்டர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது .

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வந்த திரைப்படம் ‘டாக்டர்’ . இந்தப்படத்தை கோலமாவு கோகிலா படம் மூலம் பிரபலமடைந்த இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார் . இந்த படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகனும், வில்லனாக வினய் யும் நடித்துள்ளனர். ராக்ஸ்டார் அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் . இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘செல்லம்மா செல்லம்மா’ பாடல் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது .

டாக்டர் படக்குழு

கொரோனா ஊரடங்கு காரணமாக தாமதமான இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மீண்டும் தொடங்கி நடைபெற்றது . இந்நிலையில் டாக்டர் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது . இதனை  படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர் . தற்போது இந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது .இந்த படத்தை இயக்கியுள்ள நெல்சன் அடுத்ததாக நடிகர் விஜய்யின் தளபதி65 படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது .

Categories

Tech |